2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நைஜரில் 50 பேர் பலி என அச்சம்

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜரின் வடக்குப் பாலைவனத்தில், உணவு, நீர் இல்லாமல், ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதையடுத்து, 50 பேரளவில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக, நைஜரின் வடக்குப் பிராந்தியமான பில்மாவின் சிரேஷ்ட உள்ளூர் அதிகாரி ஃபடெளமி பெளடெள, நேற்று (26) தெரிவித்துள்ளார்.   

சஹாரா பாலைவனத்தின் எல்லையிலுள்ள ஒதுக்குப்புற நைஜர் நகரான அகடெஸ்ஸிலிருந்து, மூன்று வாகனங்களில், லிபியாவுக்குச் சென்ற 70 பேரைக் கொண்ட குழுவொன்றிலிருந்த 24 பேரை, அதிகாரிகள், நேற்று முன்தினம் (25) மீட்டதாக, பெளடெள கூறியுள்ளார். ஆட்கடத்தும் பிரதான நிலையமொன்றாக அகடெஸ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   

பாலைவனத்தின் நடுவில், உணவு, நீர் இல்லாமல், அவர்களை, ஆட்கடத்தல்காரர்கள் கைவிட்டதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தெரிவிக்காமல், சில இறந்த உடல்களை பற்றி மீட்கப்பட்டவர்கள் கதைத்ததாக, பெளடெள தெரிவித்துள்ளார்.   

எவ்வாறெனினும், பாதுகாப்புத் தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டிய, அகடெஸ்ஸைத் தளமாகக் கொண்ட எயார் இன்ஃபோ இணையத்தளம், படைகளாலும் உள்ளூர்வாசிகளாலும், பல உடல்கள், நேற்று முன்தினம் புதைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.   

இந்நிலையில், அதிகாரிகளால், நேற்று முன்தினம், இறந்த 52 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, உள்ளூர் வானொலி அலைவரிசையொன்று தெரிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .