2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நைஜீரியப் படையினர் 30 பேரைக் கொன்றோம்’

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் வடகிழக்கு பொர்னோ மாநிலத்தில் நைஜீரியப் படையினர் 30 பேரை,நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலொன்றில் கொன்றதாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொர்னோ மாநிலத்தின் லோகோமணி கிராமத்தில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்று படைகளால் நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டதாகவும் எட்டுப் படைவீரர்கள் காயமடைந்ததாகவும் ஒருவருக்கும் உயிராபத்தான காயங்களில்லை என நைஜீரிய இராணுவத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது செய்தி முகவரகமான அமக்கில் அறிக்கையொன்றை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, லொமணி கிராமத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு நேற்று  உரிமை கோரியுள்ளது.

இந்நிலையில், தங்களது படையினரில் எண்மர் மாத்திரமே காயமடைந்ததாகவும் அவர்களில் நால்வர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் ஏனைய நால்வரே சிகிச்சை பெறுவதாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இஸ்மாலியக் குழுவான போகோ ஹராமிலிருந்து 2016ஆம் ஆண்டு பிரிந்த மேற்கு ஆபிரிக்காவில் ஐ.எஸ் குழுவானது, வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த சில மாதங்களில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .