2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நைஜீரியாவில் ஆயுததாரிகள், கொள்ளையர்கள் மோதல்: 45 பேர் இறந்தனர்

Editorial   / 2018 மே 07 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்புப் படம்

வட நைஜீரியாவின் கடுனா மாநிலத்தின் கவாஸ்கா கிராமத்தில் ஆயுதந்தரித்த கொள்ளையர்களுக்கும் ஆயுததாரிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் 45 பேர் இறந்ததாக பொலிஸாரும் உள்ளூர் ஆயுதக் குழுவொன்றும் நேற்றுதெரிவித்துள்ளனர்.

புதரில் 45 சடலங்கள் சிதறியபடி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கிராமத்தைப் பாதுகாப்பதற்காக பரந்துபட்டிருந்த கிராமவாசிகளை தாக்கிய கொள்ளைக்காரர்கள் அவர்களைத் தொடர்ந்து சென்றதாக அங்கிருக்கும் நபரொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறந்தவர்களில், தாக்குதலின்போது அவர்களின் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த குறித்த நபர், தாக்குதல்களை மேற்கொண்டோர் அயர்ல் ஸம்பாரா மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதம் தரித்த கொள்ளையர்களே தாக்குதலாளிகள் எனத் தெரிவித்துள்ளார்.

பிர்னின் கவாரி பகுதியை குறித்த கொள்ளையர்கள் அச்சுறுத்துவதாகத் தெரிவித்த குறித்த நபர், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொள்ளையர்கள் தாக்கத் தொடங்கியதாகவும் மூன்று மணித்தியாலங்கள் இருந்ததாகவும் பின்னர் ஸம்பராவின் காட்டிலுள்ள தளத்துக்குச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பெரும்பாலான வீடுகளை கொள்ளையர்கள் எரித்ததாக குறித்த நபர் தெரிவித்த நிலையில், இத்தாக்குதலை உறுதிப்படுத்திய கடுனா மாநிலை பொலிஸ் தலைவர் ஒஸ்டின் இவார், மிகவும் சக்திவாய்ந்த ஆயுததாரிகளுக்கும் கொள்ளையர்களுக்மிடையே வன்முறை இடம்பெற்றதாகக் கூறியுள்ள்ளார்.

பாதிப்புகளை வெளிப்படுத்தியிருக்காத ஒஸ்டின் இவார், நேற்று முன்தினம்12 பேர் புதைக்கப்பட்டதாகவும் நேற்று 33 பேர் புதைக்கப்பட்டதாகவும் மட்டுமே கூறினார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X