2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நைஜீரியாவில் வாக்கெடுப்பு நாளன்று தேர்தல் ஒத்திவைப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் நேற்று முன்தினம் (16) நடக்கவிருந்த தேர்தல் வாக்கெடுப்பு, அது ஆரம்பிப்பதற்குச் சில மணிநேரங்கள் முன்னதாக ஒரு வாரத்தால் ஒத்திவைக்கப்பட்டமையால், அங்கு மோசடிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவென, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், வாக்கெடுப்பை ஒத்திவைப்பதற்கு எடுத்த முடிவை, தேர்தல்கள் ஆணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது.

நைஜீரீயாவின் ஜனாதிபதியையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பே, நேற்று முன்தினம் இடம்பெறவிருந்தது. ஆனால், தேர்தல் சம்பந்தமான பொருட்களைப் போக்குவரத்துச் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக, வாக்கெடுப்பை ஒரு வாரத்தால் ஒத்திவைத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

இதற்கு மேலதிகமாக, தேர்தலைக் குழப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கும் ஆணைக்குழு, இரண்டு வாரங்களில், தமது 3 அலுவலகங்களில் பாரிய தீ ஏற்பட்டது எனவும் தெரிவிக்கிறது.

எனினும், வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள சிவில் சமூகக் குழுக்களும் எதிர்க்கட்சிகளும், தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனத் தெரிவிக்கின்றன.

அதேபோல், இந்த ஒரு வாரகாலத்துக்குள், தேர்தலில் மோசடிகளை மேற்கொள்ளவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மறுபக்கமாக, ஆளுங்கட்சியான ஜனாதிபதி முஹமட் புஹாரியின் தரப்பும், இவ்வாறு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .