2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நைரோபி தாக்குதல் முடிவுற்றதென்றார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யத் தலைநகர் நைரோபியிலுள்ள உயர் ரக ஹொட்டல் வளாகத்துக்குள் புகுந்து 14 பேரைக் கொன்ற ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா இன்று தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 20 மணித்தியாலங்களாக நீடித்த குறித்த முற்றுகையில், குறைந்தது ஒரு தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னை வெடிக்க வைத்திருந்ததுடன், பாதுகாப்பு படைகளுடன் துப்பாக்கிதாரிகள் பல தடவைகள் துப்பாக்கிமோதலில் ஈடுபட்டிருந்தனர்.

101 அறைகளைக் கொண்ட ஹொட்டல், உணவகம், அலுவலகக் கட்டடங்களை உள்ளடக்கிய குறித்த வளாகம் மீதான தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலியக் குழுவான அல்-ஷபாப் உரிமை கோரியிருந்தது.

தொலைக்காட்சி வழியே உரையாற்றிய உஹுரு கென்யாட்டா, தாக்குதலின்போது 700 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாகக் தெரிவித்தார்.

இந்நிலையில், மொத்தமாக எத்தனை தாக்குதலாளிகள் இருந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை. உள்ளூர் ஊடகங்களில், கடுமையாக ஆயுதந்தரித்த கறுப்பு உடையணிந்த நான்கு பேர் வளாகத்துக்குள் நேற்று  பிற்பகலில் உட்செல்வதான கண்காணிப்பு கமெராக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டிருந்தன.

அந்தவகையில், தாக்குதலின் ஆரம்பத்தில் குறித்த நால்வரில் ஒருவராது அவரை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றநிலையில், நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தாக்குதலாளிகள் இருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று பாரிய வெடிப்பொன்றுடன் துப்பாக்கிப் பிரயோகத்துடன் பிற்பகல் மூன்று மணியளவில் ஆரம்பித்த தாக்குதலில், ஐக்கிய அமெரிக்க பிரஜையொருவரும் கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 11 கென்யர்களும், பிரித்தானிய பிரஜையொரருவரும் வளர்ந்த ஆணொருவரும் கொல்லப்பட்டதாக பிணவறை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .