2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நைரோபி ஹொட்டல் வளாகத் தாக்குதல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் தலைநகர் நைரோபியிலுள்ள ஹொட்டல் வளாகமொன்றில் நேற்று முன்தினம் ஆரம்பித்து நேற்று முடிவடைந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

14 பேரே கொல்லப்பட்டதாக நேற்றுத் தெரிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கையை 14இலிருந்து 21ஆக கென்ய பொலிஸ் தலைவர் ஜோசெப் பொய்னெட் உயர்த்தியதோடு, கொல்லப்பட்டவர்களில் 16 கென்யர்களும் ஒரு அமெரிக்கரும் ஒரு பிரித்தானியரும் மூன்று ஆபிரிக்கர்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த உயிரிழந்த அமெரிக்கர், ஐக்கிய அமெரிக்கா மீது 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து தப்பியவரென அவரின் சகோதரர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

முன்னர் தெரிவிக்கப்பட்ட கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையத் தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் காயங்கள் காரணமாக பொலிஸ் அதிகாரியொருவர் இறந்ததாக ஜோசெப் பொய்னெட் தெரிவித்துள்ளார். இதுதவிர, காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஜோசெப் பொய்னெட் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் குழு குறித்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்த நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசசேலத்தை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கிகரித்த முடிவுக்கெதிராகவே தாக்குதலை அல்-ஷபாப் குழு நடத்தியதாக சைட் கண்காணிப்புக் குழுவின் தகவல்படி உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .