2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

படையினரின் சூட்டில் அறுவர் பலி; 57 பேர் காயம்

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொங்கொ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்க எதிராக, கத்தோலிக்கத் தேவாலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின் விளைவாக, குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதோடு, 57 பேர் காயமடைந்தனர் என அறிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் ஆராதனைகளைத் தொடர்ந்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி கபிலாவின் ஆட்சிக் காலம், 2016ஆம் ஆண்டு டிசெம்பருடன் நிறைவடைந்துள்ள போதிலும், அப்பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனால், ஜனாதிபதிக்கெதிரான எதிர்ப்புகள், தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

தலைநகர் கின்ஷாசாவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஏராளமான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன என, ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த, கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள ஐக்கிய நாடுகள் நிலையத்தின் பேச்சாளர்கள், உயிரிழந்த, காயமடைந்தோரின் எண்ணிக்கையை வெளிப்படுத்தியதோடு, மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், டிசெம்பர் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஒத்ததாகவே அமைந்திருந்தது. அப்போதும், கத்தோலிக்கச் செயற்பாட்டாளர்களாலேயே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, கொங்கோ படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .