2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பயங்கரவாதத்துக்கு உதவும் பட்டியல் விவகாரத்தை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்’

Editorial   / 2021 மே 08 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத நிதியுதவி மற்றும் நிதிச்சலவை செய்தல் போன்ற அதிக ஆபத்து வாய்ந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை புதிதாக சேர்த்துக் கொள்வதற்காக ஐக்கியஇராச்சிய ம் (பிரித்தானியா) கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட முடிவு, மற்ற நடுநிலை ஜனநாயக நாடுகளில் கால தாமதமாக என்றாலும் விழிப்புணர்வைத் தூண்டுவதாக இருத்தல் வேண்டும். பல தசாப்தங்களாக பாகிஸ்தான் மிகவும் தாராளமாக வளர்த்து வந்த பயங்கரவாத செயற்பாடுகளின் ஊடாக முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், பாகிஸ்தானிடம் இன்னும் தாராளமாகக் காணப்படுகிறது.

முக்கியமாக இதுபற்றி பிரெஞ்சு அரசிடம் கலந்துரையாடினால், இந்த பட்டியலுக்கு ஒரு சாதகமான காரணிகள் கிட்டக்கூடும். கடந்த சில நாட்களாகவே, பாகிஸ்தான் முழுவதும் உள்நாட்டு இராணுவ கட்டமைப்புடன்  தொடர்புபட்ட ஒரு கடும் போக்குடைய தீவிரவாத குழுவினரால் பிரெஞ்சு எதிர்ப்பு அலைகள் வெளிப்படையாகவே தூண்டிவிடப்பட்டன. இந்த நிலைமை, பாதுகாப்பு கருதி, தனது நாட்டினரை உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேற அறிவுறுத்தும் அளவுக்கு பிரெஞ்சு அரசாங்கத்துக்கு நெருக்கடி நிலைமைகளைத் தோற்றுவித்தது.

அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் 'நிதிச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் திருத்தமூலம் மற்றும் (அதி உயர் ஆபத்துள்ள நாடுகள்) விதிமுறைகள் 2021' மார்ச் 26 முதல் நடைமுறைக்கு வந்தது. BREXIT க்கு முன்பதாக, பிரித்தானியா வசமிருந்த அதி உயர் ஆபத்துள்ள நாடுகளின் பட்டியல், 4 வது நிதிச்சலவை தடுப்பு உத்தரவுக்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) தீர்மானிக்கப்பட்டது.

பிரித்தானிய அரசாங்கத்தின் 2020 டிசம்பர் மாத அறிக்கையில் "பாகிஸ்தானில் இருந்து தவறான வழியில் பெறப்பட்ட மிகப்பெரிய தொகைப்பணம் பிரித்தானியாவுக்குள் தடையின்றி கொண்டு வரப்படுகிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

இவ்வாறாக சட்டவிரோதிகள் பாகிஸ்தானில் இருந்து பிரித்தானியாவுக்கும், பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள்ளும் கொண்டுவரப்படும் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பெருஞ்செல்வத்தை நிதிச்சலவை செய்யும் நோக்கில் பாரிய அளவிலான அசையா சொத்துகள் (Real Estate), மிகவும்  விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் போன்ற உயர் மதிப்புள்ள வளங்களில் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

ஊழல், மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றால் பெறப்பட்ட பாரிய அளவிலான நிதிச்சலவை செய்யப்பட்ட பணமும் இதில் அடங்கும். அப்படியாகக் கடத்தப்பட்ட பணம் மற்றும் பண மாற்று வர்த்தகம் (MSBs) என்ற போர்வைக்குள் பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடத்தப்படும் அபாயமும் நீடிக்கிறது,” என்று கூறுகிறது.

பிரித்தானிய அரசாங்கத்தின் திறைசேரி மற்றும் உள் விவகார அறிக்கை இவ்வாறு கோடிட்டுக் காட்டுகிறது: இதுபோன்ற அடிமட்ட சலுகை பெற்று வாழும் தனிநபர் குழுக்கள், அன்றாட வாழ்க்கையை சமாளிக்கக்கூட கடும் போராட்டம் நடத்தும்  சராசரி பாகிஸ்தானியர்களை விட, கீழ்மட்ட அளவில் வாழும் இவர்கள் போன்றவர்கள் தான் மோசமான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன்மூலம் ஈட்டிய பெருந்தொகையான சட்டவிரோத செல்வத்தைக் கொண்டிருப்பவர்களாகக் காணப்படுகிறார்கள்.

ஓரளவேனும் தன் மேல் படிந்துள்ள களங்கத்துக்கு மறுதளிப்பை வெளியிடத் தயாராவது போல் முனைப்புக்காட்டும் பாகிஸ்தானின் இரட்டை வேடம்; அதாவது, பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ-லாபாய்க் (டி.எல்.பி) இன் தலைவரான சாத் உசைன் ரிஸ்வியை உள்ளூர்  பாதுகாப்பு படையினர் கடந்த ஏப்ரல் மாதம் 12 ம் திகதி கைது செய்ததையடுத்து, வெடித்த வன்முறை மூலம்  அம்பலத்துக்கு வந்தது. இது, முகமது நபியின் சித்திரங்களை பிரான்ஸ் வெளியிட்டமை தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிரெஞ்சுத் தூதரை வெளியேற்றவில்லை எனில், அரசாங்க எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக ரிஸ்வி அச்சுறுத்திய நாளுக்கு அடுத்த நாள் அவரது கைது இடம்பெற்றது.

TLP என்பது, தீவிரவாத தெஹ்ரீக்-இ-லாபாய்க் யா ரசூல் அல்லாஹ் (TLYRA) இயக்கத்தின் அரசியல் பிரிவாகும்.

சில காலங்களுக்கு முன், ஒரு பிரெஞ்சு பள்ளி ஆசிரியர் தனது நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கருத்த்துச் சுதந்திர போக்கை விமர்சனம் செய்தது மட்டுமன்றி, தனது வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு முஹம்மது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை  கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் காட்டினார்.

அதற்காக அவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். TLP அமைப்பானது, இஸ்லாமியத்திற்கு எதிரான அவதூறுகளை கண்டிப்பதே முதன்மை நோக்காகக் கொண்டு இயங்குகிறது. அந்த கடும்போக்கு அமைப்பானது, பாகிஸ்தான் அரசாங்கம் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரியது.

ஏனெனில், பாகிஸ்தான் சட்டத்தின் கீழ், முகமது நபியை அவமதித்த ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரும்.

ஏப்ரல் 11 ஆம் திகதி ரிஸ்வி, பிரான்சில் முகமது நபி பற்றிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டது தொடர்பாக, ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு முன் பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வேண்டுமென பிப்ரவரி மாதம் தனது கட்சிக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

ஆயினும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மட்டுமே உறுதியளித்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் அந்த சூழ்நிலையில் மக்ரோனை விமர்சித்திருந்தார். பிரெஞ்சு தூதரை வெளியேறச் சொல்வது வெறுமனே மேற்கொண்ட ஒரு தீர்மானமாக இருக்கக்கூடாது என்றும், அது நிதர்சனத்தில் நடைபெற வேண்டும் என்பதை உணர்ந்த ரிஸ்வி, தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய காரணத்தால் பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

ரிஸ்வியை முன்கூட்டியே கைது செய்வது சற்றே ஒரு மிதமான ஒரு சூழ்நிலையையே ஏற்படுத்தும் என்று பாகிஸ்தானிய அரசு மதிப்பிட்டது, ஆனால் அதே நேரத்தில், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை அனுமானித்து, அத்தகைய நடவடிக்கை வன்முறைகளை தூண்டக்கூடும் என்று சற்றே மிதமான  போக்கைக் கடைபிடிக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

ரிஸ்வியின் கைது பற்றிய செய்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான TSP ஆதரவாளர்கள் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பல நகரங்களில் வீதிகளில் இறங்கி கழகம் விளைவித்தனர்.

உள்ளூர் பாதுகாப்பு படையினருடன் முறுகல் நிலை ஏற்பட்டு வன்முறை வெடித்தது. அடுத்த மூன்று நாட்களில், குறைந்தது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப் பட்டதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலகக்காரர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத தடங்களை தடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். அவர்கள் ரிஸ்வியை விடுவிக்கக் கோரியும், பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வேண்டுமென்ற தங்கள்  கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

பாகிஸ்தான் முழுவதும் பரவிய வன்முறை உச்சத்துக்கு செல்ல, அவை மிகவும் ஆபத்தானது என்றும் பிரான்ஸ் எதிர்ப்பு உணர்ச்சிகள் மிகவும் கடுமையானதாகிவிட்டன அன்றும் உணர்ந்த, பிரெஞ்சு அரசாங்கம், இறுதியில் தனது குடிமக்களை உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேற்ற முடிவு செய்தது.

டி.எல்.பியுடனான ஒப்பந்தம் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பக்கமிருந்து பார்க்கும்போது சரியானதாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், ஒரு நாட்டின் அரசாங்கம் ஏன் ஒரு தீவிரவாத அமைப்பின் கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகிறது.

அத்தோடு, ஒரு பெரிய நிதி நன்கொடையாளராக விளங்கும், பொறுப்பான மற்றும் நட்பு நாடுடனான உறவு தீவிரவாதிகளின் கோரிக்கைகளினால் கொச்சைப் படுத்தப்படலாமா என்ற மேலும் ஒரு கேள்வியும் அங்கே எழுகிறது. இரண்டு விளக்கங்களில் ஒன்று மட்டுமே இங்கு சாத்தியம் - அதாவது, ஒன்று அரசாங்கம் எப்படியாவது கோரிக்கையாளருக்கு அடிபணிந்துவிட்டது. அல்லது அவருக்குப் பயந்துவிட்டது.

ரிஸ்வி கைது செய்யப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட அதிர்வலைகள் காரணமாக அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசாங்கம், ஏப்ரல் 14 அன்று டி.எல்.பி இயக்கத்தைத் தடை செய்ய முடிவு செய்தது. உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது செய்தி மாநாட்டில் இது பற்றி தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் வேறு சில கருத்துக்களை மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். “நாங்கள் நபி அவர்களின் கௌரவத்தை பாதுகாப்பதில் உறுதியோடு இருக்கிறோம், ஆனால் அவர்களது கோரிக்கை உலகெங்கும் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத தேசமாக அடையாளம் காட்டிவிடக்கூடும்.

அதன் பொருள் என்னவென்றால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே." அமைச்சர் அகமது வெளிப்படுத்திய பாகிஸ்தானின் நற்பெயர் மீதுள்ள அக்கறை, குறிப்பாக தீவிரமயமாக்கப்பட்ட, பயங்கரவாதத்துடனான நட்பு, அதாவது சர்வதேச சமூகத்தின் அத்தகைய பதவியானது, பாகிஸ்தான் என்ற ஸ்தாபனத்தை தரவரிசைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

பயங்கரவாதத்துடனான பாகிஸ்தானின் வலுவான தொடர்புகள் குறித்து சமீபத்திய ஆண்டுகளில் முன்னிலைப்படுத்திக் காட்டியதில் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. அதன் நற்பெயரைக் காத்துக்கொள்ளும் அக்கறை பாகிஸ்தானின் மீது விழுந்த அழுத்தத்தின் நேரடி விளைவாகும். மேலும் அந்த அழுத்தம் சொல்லத் தொடங்கியுள்ளது என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது. அவ்வாறாக செலுத்தப்பட்ட அழுத்தம் தற்போது வெளிப்படத்  தொடங்கியுள்ளது என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது.

சீர்திருத்தப்பட்ட, பொறுப்பான பாகிஸ்தான் என்ற தேசத்தைக் காண விரும்பும் ஏனைய நாடுகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .