2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பயங்கரவாதத்தால் தாக்கப்பட்ட நதன்ஸ் அணு நிலையம்: ஈரான்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானின் நதன்ஸ் அணு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவமொன்றானது, அணுப் பயங்கரவாத நடவடிக்கையொன்றால் ஏற்பட்டதென, ஈரானின் அணுத் தலைவர் அலி அக்பர் சலெஹி தெரிவித்ததாக, அந்நாட்டு அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

தவிர, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை ஈரான் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நிலையம் மீது இணையவழித் தாக்குதலொன்றை இஸ்ரேலின் மொஸாட் உளவு முகவரகம் நடத்தியதாக, அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாத புலனாய்வு முகவரகங்களை மேற்கோள்காட்டி இஸ்ரேலின் கன் பொது வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

நதன்ஸ் நிலையத்தின் மின் விநியோகக் கட்டமைப்புடனான பிரச்சினையொன்று காரணமான சம்பவமொன்று இடம்பெற்றதாக ஈரானின் அணு சக்தி நிறுவனத்தின் பேச்சாளர் பெஹ்ரெளஸ் கமல்வன்டி தெரிவித்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பின்னர் நதன்ஸ் நிலையத்துக்கு விஜயம் செய்யும்போது கமல்வன்டி விபத்தொன்றை எதிர்கொண்டதாகவும், தலை, கால் முறிவடைந்ததாக ஈரானிய ஊடகங்கள் பின்னர் செய்தி வெளியிட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .