2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேச ஐ. அமெரிக்க பட்டியலில் கியூபா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேசங்களின் ஐக்கிய அமெரிக்க பட்டியலில் கியூபாவை இணைத்துள்ளதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது நேற்று அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்து கியூபாவுடனான உறவுகளைப் புதுப்பிப்பதில் ஐ. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமானது சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.

ஐ. அமெரிக்க குற்றவாளிகளை, கொலம்பிய போராளித் தலைவர்களைப் பாதுகாத்து சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மீண்டும் மீண்டும் ஆதரவளித்தமை காரணமாக குறித்த பட்டியலில் கியூபா சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்துள்ளார்.

தவிர, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கான கியூபாவின் பாதுகாப்பு ஆதரவு காரணாமாக, அவர் தனது அதிகாரத்தை தக்க வைப்பதாகவும், சர்வதேச பயங்கரவாதிகள் இருந்து முன்னேற வழிவகுப்பதாகவும் பொம்பயோ மேலும் கூறியுள்ளார்.

குறித்த பட்டியலிலிருந்து 2015ஆம் ஆண்டு கியூபாவை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நீக்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .