2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பரிசோதனையையடுத்து பதவியேற்பு பணியிலிருந்து 12 காவலர்கள் அகற்றம்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை பாதுகாப்பதற்கு உதவுவதற்காக கடமையிலிருந்த அந்நாட்டு தேசிய காவலர்களின் 12 உறுப்பினர்கள் பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளாதாக அந்நாட்டு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

வலதுசாரி தீவிரவாதத்துடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என்ற சோதனைகள் உள்ளடங்கலான பரிசோதனைகளைத் தொடர்ந்தே இவர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்புகளைத் தாண்டி சோதனைகள் சென்ற பாதுகாப்புத் திணைக்கள பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைக்குரிய தகவலொன்றை அனுப்பியதையடுத்து ஒரு காவலர் உறுப்பினர் பணியிலிருந்து அகற்றப்பட்டதுடன், மற்றொருவர் குற்றமொன்றைப் புரிந்ததால் அகற்றப்பட்டதாக தேசிய காவலர் முகவரகத்தின் தலைவர் இராணுவ ஜெனரல் டேனியல் ஹொகன்ஸன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X