2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பலஸ்தீனத்துடன் பேசத் தயார்’

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்குப் பிரச்சினை தொடர்பாக, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்‌ரேலின் தலைநகராக, ஜெருசலேத்தை அங்கிகரிக்கும் ஐ.அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்காவுடனான சந்திப்புகளையோ அல்லது பேச்சுவார்த்தைகளோ, பலஸ்தீனம் தவிர்த்து வரும் நிலையிலேயே, ஐ.அமெரிக்காவின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய நாடுகளுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும், பலஸ்தீனத்தின் பின்னால் சென்று, அவர்களைத் துரத்தி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை எனவும், இதற்கான தெரிவு, பலஸ்தீனத் தரப்பிடமே காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .