2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழகத்துக்குள் சென்ற ஹொங் கொங் பொலிஸார்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிடெக்னிக் பல்கலைக்கழக கம்பஸ்ஸுக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோரை கைது செய்வதற்காக இன்று பிற்பகலில், முற்றுகையிடப்பட்டிருந்த கம்பஸ்ஸுக்குள் தடைகளைத் தாண்டி ஹொங் கொங் பொலிஸார் சென்றிருந்தனர்.

நேற்றிரவு இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகள், கம்பஸ்ஸுக்குள் நுழைய இன்று அதிகாலைக்கு முதல் நுழைய முயன்ற பொலிஸாரின் முயற்சியொன்றுக்கு பின்னரே கம்பஸ்ஸுக்குள் இன்று பிற்பகல் பொலிஸார் சென்றிருந்தனர்.

கம்பஸ் பகுதி அனைத்தையும் பொலிஸார் முடக்கியதைத் தொடர்ந்து, கண்ணீர்ப்புகைப் பிரயோகத்துக்கு பதிலடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழங்கிய நிலையிலேயே மேற்குறித்த நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

இன்று அதிகாலைக்கு முன்னர் கம்பஸ்ஸுக்குள் நுழைய முயன்றதைத் தொடர்ந்து கலகமடக்கும் குழாம்கள் கம்பஸை சுற்றிவளைத்திருந்தன. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தப்பிக்க முயன்றபோதும் அவர்கள் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தால் உட்தள்ளப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கம்பஸ்ஸுக்குள் இன்னும் நூற்றுக்கணக்கானோர் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், பாரிய எண்ணிக்கையில் கைதுகளை பொலிஸார் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, ஊடகத் தொடர்பாடல் அதிகாரியொருவராக உறுதிப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காலில் அம்பொன்றால் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அதிகாரிகளைத் தாக்குவதற்கு மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிக்கையொன்றில் இன்று பொலிஸார் எச்சரித்திருந்ததுடன், ஏனைய வன்முறைகளை நிறுத்துமாறும் எச்சரித்திருந்ததுடன், படைப்பலத்தை அதிகாரிகள் பிரயோகிப்பார்கள் எனவும் தேவைப்பட்டால் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வார்கள் எனவும் எச்சரித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X