2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பா.ஜ.கவின் அடுத்த குறி கர்நாடகா’

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவை நோக்கமாகக் கொண்டு, 2018ஆம் ஆண்​டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட பிரசாரத்தை, கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக, பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர்
பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  

“கர்நாடகாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசாங்கம் மீது, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால சட்டசபைத் தேர்தலில், எமது கட்சி வெற்றிபெறும். காங்கிரஸின் அதிகாரத்தில் இருக்கும் கடைசி பிரதான மாநிலமாக கர்நாடகா இருக்கின்றமையால், கட்சித் தலைவர் அமித் ஷா, கர்நாடகாவையே குறிவைத்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.  

“யெத்தினஹோல் திட்டத்தில் பணியாற்றாது, காங்கிரஸ் அரசாங்கம் குழாய்களைக் கொள்வனவு செய்து, தரகுப்பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 2013, 2014ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர், கர்நாடகாவின் அரசியல் நிலைவரம், கடுமையாக மாறிவிட்டது.  

“2007ஆம் ஆண்டு, அதிகாரத்தை எமக்கு வழங்குவதற்கு, ஜனதா தளம் கூட்டிணையாதமையால், தேர்தலொன்றை வைத்து, 2008ஆம் ஆண்டு, ஆட்சியை நாம் கைப்பற்றினோம். 2013ஆம் ஆண்டு, பா.ஜ.க மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டதன் பின்னரே, காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டது.  

“ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அளித்திருக்கும் சேவையில் அடிப்படையில், தற்போது நாம் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றோம் என்பதோடு, மக்களுக்கு ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை வழங்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .