2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் வெடிக்கும் வன்முறைகள்

Editorial   / 2021 மே 03 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில்  அண்மைக்காலமாக தெஹ்ரீக்-இ-லாப்பாய்க்  கட்சியினரால் (டி.எல்.பி) பிரான்ஸ் அரசுக்கெதிராகப் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இதனை கட்டுப்படுத்த இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு குறித்த கட்சியைத் தடை செய்ததோடு அக் கட்சியின் தலைவர் சாத் உசேன் ரிஸ்வியையும் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்து  பின்னர் விடுதலை செய்தது.

இதனையடுத்து  அரசின் இந் நடவடிக்கைகளுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குறித்த அமைப்பினர் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு இன் போது பல வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.

இவ் வன்முறைச் சம்பவங்களால் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்ததோடு ஆயிரக்கணக்கான டி.எல்.பி ஆர்வலர்களும்  கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக பஞ்சாப் மாகாணம் முழுவதும் டி.எல்.பி.யின் ஆதரவாளர்களால் பொலிஸாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு சில பொலிஸார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும்  கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .