2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதுகாப்பு அமைச்சர் மீது தடைக்குக் கோரிக்கை

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ் -தானின் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அசதுல்லா காலிட் மீது தடைகளை விதிக்குமாறு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆப்கானிஸ்ததானுக்கு உதவி வழங்கும் முக்கியமான நாடுகளிடம் கோரியுள்ளது. காலிட் மீது முன்வைக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஆகியன தொடர்பிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் பதில் பாதுகாப்பு அமைச்சராக, காலிட்டை, கடந்த மாதத்தில், ஜனாதிபதி அஷ்ரப் கானி நியமித்திருந்தார். தலிபான் ஆயுதக்குழுவுக்கு மிகவும் எதிரானவராகக் கருதப்படும் இவரின் நிமயனம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. குறிப்பாக, கஸ்னி, தெற்கு கந்தகார் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக, 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றிய போது, கொலைகளிலும் சித்திரவதையிலும் சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இந்நிலையில், அவரது நியமனம் தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், “பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக, நம்பத்தகுந்த ஆதாரங்கள், அவரின் அரசாங்கக் காலம் முழுவதும் தொடர்ந்தன” எனக் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும், அவர் மீதான தடைகளை விதித்து, அவரின் சொத்துகளை முடக்க வேண்டுமென, அக்கண்காணிப்பகம் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .