2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தும் சீனாவின் நகர்வு: ஹொங் கொங்கில் எதிர்ப்பு

Editorial   / 2020 மே 22 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாதுகாப்புச் சட்டம் ஒன்றை அமல்படுத்தும் சீனாவின் நகர்வானது ஹொங் கொங்கின் சுயாட்சி மீதான சீனாவின் மோசமான தாக்குதல் எனத் தெரிவித்த ஹொங் கொங்கிலுள்ள ஜனநாயகத்துக்கு ஆதரவாளர்கள், இது தொடர்பாக வீதிகளுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளனர்.

சட்டமூலத்துக்கான முன்மொழிவானது தேசத்துரோகம், அழிவு, கிளர்ச்சியை தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சீனாவின் அதிகாரபூர்வமற்ற நாடாளுமன்றத்தின் வருடாந்த அமர்வின் ஆரம்பத்தில் இன்று காலை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

ஹொங் கொங்கில் எதிர்ப்பை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என சீனாவின் கம்யூனிசத் தலைவர்களின் மீண்டும் மீண்டுமான எச்சரிக்கையைத் தொடர்ந்தே குறித்த நகர்வு இடம்பெற்றுள்ளது.

கடந்தாண்டு ஜனநாயகத்துக்கு ஆதரவான பாரிய ஆர்ப்பாட்டங்களை ஹொங் கொங் ஏழு மாதங்களாகச் சந்தித்திருந்தது.

கடந்தாண்டு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த மில்லியன் கணக்கானோர் பேரணியை ஆரம்பித்த சிவில் மனித உரிமைகள் முன்னணியின் தலைவர் ஜிம்மி ஷாம், ஹொங் கொங்கை அழிக்க சீனாவின் கம்யூனிசக் கட்சி பயன்படுத்திய பாரிய அணுவாயுதம் இதுவெனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மில்லியன் கணக்கானோரை மீண்டும் வீதிகளுக்கு வருமாறு ஜிம்மி ஷாம் கோரியுள்ள நிலையில், இணையம், செயலிகளைப் பயன்படுத்தி நாளை மறுதின ஆர்ப்பாட்டங்களுக்கு ஏனைய செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஹொங் கொங்கின் சிறிய அரசமைப்பின் 23ஆவது சரத்தானது, சீன அரசாங்கத்துக்கெதிரான தேசத்துரோகம், அழிவு, கிளர்சியை தடைசெய்வதற்கான சட்டத்தை ஹொங் கொங் அமுல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றபோதும், இது தமது சிவில் உரிமைகளை அழிக்கும் என்ற ஹொங் கொங் மக்களின் எதிர்ப்பால் ஒருபோதும் அமுல்படுத்தப்படவில்லை.

குறித்த சரத்தை ஹொங் கொங் நாடாளுமன்றமூடாக நிறைவேற்றும் முயற்சியானது இதற்கெதிராக அரை மில்லியன் மக்கள் வீதிகளில் களமிறங்கியதால் 2003ஆம் ஆண்டில் கைவிடப்பட்டிருந்தது.

இந்த விடயத்தையே தற்போது தேசிய நாடாளுமன்றமூடாக சீனா செய்யப் போகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .