2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பாரிய தவறைச் செய்தேன்: பாப்பரசர்

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலியில் காணப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையைக் கையாள்வதில், “பாரிய தவறை” செய்ததாக, பாப்பரசர் பிரான்ஸிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். அதுகுறித்து வெட்கமடைவதாகத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கோருவதற்காக, அவர்களை றோமுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

சிலியின் பேராயராக 2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஜுவான் பரொஸ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டுக் காணப்பட்ட நிலையில், அந்நியமனம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

ஆரம்பத்தில், பரொஸை நியாயப்படுத்திய பாப்பரசர், அவர் மீது அவதூறுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அது தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே, பரொஸ் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியோரைச் சந்தேகப்பட்டமைக்காக, பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

திருச்சபை மீதான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப விரும்புவதாகக் குறிப்பிட்ட பாப்பரசர், “எங்களுடைய தவறுகளாலும் பாவங்களாலும், நம்பிக்கை உடைக்கப்பட்டது” என்றும் “சிலியின் சமூகத்தில், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் காயங்களை ஆற்ற விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .