2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பின்வாங்கியது வடகொரியா; உறுதியுடன் தென்கொரியா

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னரான, இணைந்த கலாசார நிகழ்ச்சியில் பங்குபற்றுவதிலிருந்து வடகொரியா பின்வாங்கியுள்ள போதிலும், ஏனைய விடயங்களில் இணைந்து செயற்படுவதில் உறுதியாக உள்ளதாக, தென்கொரியா அறிவித்துள்ளது.

இரு நாடுகளும் இணைந்து, பெப்ரவரி 4ஆம் திகதி மேற்கொள்ளவிருந்த கலாசார நிகழ்விலிருந்து வெளியேறும் அறிவிப்பை, நேற்று முன்தினம் (29) இரவு, வடகொரியா வெளியிட்டது. பொதுமக்களிடத்தில் அவமானப்படுத்தும் உணர்வை, தென்கொரிய ஊடகங்கள் ஏற்படுத்துகின்ற என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே, இவ்வாறு வடகொரியா விலகியது.

இது, பின்னடைவாகக் கருதப்பட்டாலும் கூட, ஏனைய விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, வடகொரியாவின் மசிக்ரோயொங் பனிச்சறுக்கல் இடத்துக்குச் சென்று, தென்கொரிய வீரர்கள் பயிற்சி பெறுவது குறித்துக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், வடகொரியா எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புக் காணப்படவில்லை என, தென்கொரிய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

வடகொரியாவும் தென்கொரியாவும், இப்போட்டிகளில் இணைந்து செயற்படுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு, சர்வதேச மட்டத்தில் வரவேற்பை வழங்கியிருந்தாலும், தென்கொரியாவில், இம்முடிவுக்கான எதிர்ப்புக் காணப்படுகிறது.

குறிப்பாக, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களின் ஐஸ் ஹொக்கி போட்டிகளில், இரு நாடுகளும் இணைந்து ஒரே அணியாகப் பங்குபற்றுவதற்கு எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது என, தென்கொரிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .