2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றும் (பிரெக்சிற்) ஒப்பந்தமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பெறுவதில் தோல்வியடைந்தாலும் பிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என நேற்று  (29) தெரிவித்துள்ள பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தனது பழமைவாதக் கட்சி அரசாங்கத்தால் மாத்திரமே அடுத்த மாதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்ற முடியும் எனக் கூறியுள்ளார்.

வட இங்கிலாந்து நகரமான மன்செஸ்டரில் நடைபெற்ற தனது பழமைவாதக் கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே குறித்த கருத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அடுத்த மாதம் 31ஆம் திகதி ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை தான் வெளியேற்றுவேன் எனும் செய்தியுடன் பழமைவாதக் கட்சியை அணிதிரள விரும்பியிருந்தார்.

எவ்வாறெனினும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தாண்ட வேண்டிய தடைகள் காணப்படுகின்றன. இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை பெல்ஜியத் தலைநகர் ப்ரஸெல்ஸில் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டுடன் ஒப்பந்தமொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பெறாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு தாமதமொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சனை கோர வைக்கும் சட்டமொன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த சட்டத்தைத் தாண்டி தான் உறுதியளித்தவாறு ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்த்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றப் போவதற்கான தனது திட்டங்களை விளக்க மீண்டும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மறுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான நிச்சயமற்ற தன்மையானது மேலும் ஆழமாகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .