2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிரதமர் மோடி – ஜனாதிபதி ஜின்பிங் சந்திப்புக்கு பதாதை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக பதாதை வைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வைக்க அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக பதாதை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அண்மையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகராட்சி உறுப்பினர் ஜெயபால் வைத்த பதாதை விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து இறந்தார்.

இதனிடையே மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி -  ஜனாதிபதி ஸி ஜின்பிங் சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனை இம்மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடக்க உள்ளது.

அந்தவகையில், தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பதாதை வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பதாதை வைக்க அனுமதி வழங்கியதுடன், பதாதை வைப்பதற்கான விதிமுறைகளை அதிகாரிகள் உறுதியாக பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் பதாதை வைக்க அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பதாதை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .