2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கான தருணம் இது’

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) ஒப்பந்தத்ததை நடைமுறைப்படுத்தவதற்கான தருணம் இது என ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்தாண்டு மார்ச் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான பேச்சுவ்சார்த்தைகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு தனது எண்ணத்தை வெளிப்படுத்தவுள்ள மே, கடந்த ஞாயிற்றுக்கிழமை தடங்கலுக்குள்ளாகிய பேச்சுவார்த்தைகளால் விசனமடைந்துள்ளார்.

இந்நிலையில், எந்தவித ஒப்பந்தமுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஐரோப்பா தயாராக இருக்க வேண்டுமென முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்த ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கல், இணக்கமொன்றுக்கு வர தன்னால அனைத்தையும் முயல்வதாக தற்போது கூறியுள்ளார்.

ஐக்கிய இராசியத்தின் வட அயர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவராக அயர்லாந்துக் குடியரசுக்கிடையே எல்லையைத் திறந்து வைப்பதில் காணப்படும் சட்டரீதியான பிரச்சினை காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியேறுவது தொடர்பான பேரம்பேசல்கள் தற்போது தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் பிளவுபட்டுள்ள தனது கன்சவேர்ட்டிவ் கட்சியிலுள்ள கடும்போக்கு பிரெக்சிற் ஆதரவாளர்களும் ஏற்க்கொள்ளக் கூடிய வகையில் பிரெக்சிற் ஒப்பந்தமொன்றைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ள மே, ஒப்பந்தைப் பெறலாம் எனக் கூறியதுடன் இதுவே அதற்கான தருணமென்று கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், சிக்கலைத் தீர்ப்பதற்கான புதிய யோசனைகளை முன்வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் மேயை தெரிவித்திருந்தார்.

இதேவேளை கருத்துத் தெரிவித்திருந்த லித்துவேனிய ஜனாதிபதி டலியா கிறிபெளஸ்கைய்டே, திருப்புமுனையொன்றும் இருக்காது எனக் கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .