2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரெக்சிற் தாமதத்தை எதிர்பார்க்கும் ஒப்பமிடாத கடிதத்தை அனுப்பினார் பிரதமர்

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) தாமதமொன்றை இம்மாதம் 31ஆம் திகதியைத் தாண்டி பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனைக் கோர பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத்தை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் தாமதமொன்றை வினவி ஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்குக்கு நேற்றிரவு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விருப்பமில்லாமல் கடிதம் எழுதியுள்ளார்.

எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை இம்மாதம் 31ஆம் திகதி வெளியேற்றுவதாக உறுதியளித்திருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன், குறித்த கடிதத்தில் கையொப்பமிட மறுத்திருந்தார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான இம்மாதம் 31ஆம் திகதி காலக்கெடுவில் நீடிப்பொன்றைத் தான் வேண்டவில்லை என வலியுறுத்தும் கையொப்பமிட்ட இரண்டாவது கடிதமொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானியத் தூதுவர் டிம் பரோவால் எழுதப்பட்ட மூன்றாவது கடிதமொன்றில், சட்டத்துக்கு கீழ்ப்படியும் வகையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை தாமதிக்குமாறு கோரும் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த வியாழக்கிழமை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஏற்படுத்திக் கொண்ட திருத்தப்பட்ட ஒப்பந்தமொன்றுக்கு ஆதரவளிக்க மறுத்திருந்தனர்.

அந்தவகையிலேயே, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் 31ஆம் திகதி பிரித்தானியா வெளியேறும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைத் தாமதப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கோர வைக்கும் சட்டத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமுலுக்கு கொண்டு வந்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .