2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரெக்சிற் தாமதமாகும்?

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுகின்றமை (பிரெக்சிற்), எதிர்பார்க்கப்பட்ட தினத்திலிருந்து தாமதமாக வேண்டியேற்படும் என, ஐ.இராச்சியத்தின் பிரெக்சிற் செயற்குழு நேற்று (18) தெரிவித்தது.

வட அயர்லாந்துக்கும் அயர்லாந்துக்குக் குடியரசுக்கும் இடையில், திறந்த எல்லையை எவ்வாறு பேணுவது உள்ளிட்ட, முக்கியமான விடயங்களில், மிகக்குறைந்தளவு முன்னேற்றங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அச்செயற்குழு, அது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

பிரெக்சிற் தொடர்பான வாக்கெடுப்பு, 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்றதோடு, வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வமான நடவடிக்கைகள், கடந்தாண்டு மார்ச் 29ஆம் திகதி ஆரம்பித்தன.

இதன்படி, 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி, ஐ.ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் வெளியேற எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வாறு வெளியேறுவதற்கு முன்னர், இவ்வாண்டு ஒக்டோருக்கும், முழுமையான இணக்கப்பாடுகள் ஏற்பட வேண்டியது அவசியமானது. ஆனால், தற்போதைய நிலையில் அது ஏற்படாது என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, பிரெக்சிற் தள்ளிப்போகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X