2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘புட்டின் விலையைச் செலுத்துவார்’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 18 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தலை, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பணித்ததுக்காக, பின்விளைவுகளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்கொள்வாரெனவும், அவை விரைவில் வருமெனவும், ஐ. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒளிபரப்பப்பட நேர்காணலொன்றில், அவர் விலையைச் செலுத்துவார் என ஏ.பி.சி நியூஸுக்கு, ஜனாதிபதி பைடன் தெரிவித்ததுடன், என்ன பின்விளைவுகளென வினவப்பட்டபோது, நீங்கள் விரைவில் காணுவீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி புட்டின், ஆன்மாவொன்றைக் கொண்டிருக்கின்றாரென தான் நினைக்கவில்லையெனவும், அவர் கொலையாளி என நம்புகிறீன்றர்களான என வினவப்பட்டதுக்கு, தான் நம்புகின்றேன் என ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .