2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய தொடர்பாடல் தளத்தை ஆரம்பித்த ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2021 மே 05 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தொடர்பாடல் இணையத்தளமொன்றை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் மேசையிலிருந்து நேரடியாக உள்ளடக்கங்களைப் பிரசுரிப்போமென குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், ஐ. அமெரிக்க காங்கிரஸ் கட்டட வன்முறைகளையடுத்து, டுவிட்டரால் தடை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், பேஸ்புக், யூட்யூப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இவ்விணையத்தளத்தில் பதிவுகளை பயனர்கள் விரும்ப முடியுமென்பதுடன், டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளில் பகிரவும் முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X