2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பெருமைமிகு ஆட்சியை வழங்குவோம்’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்ற 5 சட்டசபைகளுக்கான தேர்தல்களில், 3 சபைகளைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில மக்கள் பெருமைப்படும் வகையிலான ஆட்சியை வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.

மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் கீழ் காணப்பட்ட சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், அறுதிப் பெரும்பான்மையையோ அல்லது தனிப்பெரும் கட்சியாகவோ உருவாகியுள்ள காங்கிரஸ், தனது மீளெழுச்சியைத் தொடங்கிவிட்டதா என்ற பார்வை எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக, இவ்வாண்டில் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்ற ராகுல் காந்தி, தனது திறனைக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது.

இந்நிலையிலேயே அவர், “இந்த மாநிலங்களுக்கான தூரநோக்கை நாம் வழங்கவுள்ளதோடு, அம்மக்கள் பெருமையடையும் வகையிலான அரசாங்கத்தை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என, மக்கள் தீர்ப்பு வழங்கியதாகவே, இத்தேர்தல் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாக, ராகுல் காந்தி தெரிவித்தார்.

இத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றாலும் கூட, பொதுத் தேர்தலில், பா.ஜ.கவை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புகள், கடினமாகவே அமையுமெனக் கருதப்படுகிறது. எனவே, ராகுல் காந்திக்கான உச்சபட்சச் சோதனையாக, பொதுத் தேர்தல்கள் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X