2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு

Editorial   / 2018 ஜூன் 15 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்  7 பேரை, விடுதலை செய்யக்கோரிய மனுவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது.

இந்த விடயத்தில் ஜனாதிபதியின் கருத்தையும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. இதற்காக தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. வழக்கு விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதை பரிசீலித்த அந்நாட்டு ஜனாதிபதி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த தகவலை அவர் தமிழக அரசுக்கும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X