2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொதுத் தேர்தலொன்றை நோக்கி பிரித்தானிய பிரதமர்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தால், பொதுத் தேர்தலொன்றை நோக்கி பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நகருவார் என அவரது அலுவலகம் இனங்காட்டியுள்ளது.

தனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் சட்டமூலத்தை நேற்று  பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இடைநிறுத்திறுத்தியிருந்தார். மூன்று நாட்களுக்குள் குறித்த சட்டமூலத்தை கைச்சாத்திடும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் திட்டத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தையடுத்தே சட்டமூலத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இடைநிறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான தனது ஒப்பந்தத்த்துக்கான் ஆதரவைப் பெறத் தவறியதையடுத்து சட்டமொன்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலகுவதை மூன்று மாதங்கள் தாமதப்படுத்துமாறு கடிதமொன்றை அனுப்ப நேர்ந்திருந்தது.

எனினும், மூன்று மாத தாமதமொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஏற்க மாட்டார் என அவரின் அலுவலகத் தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் ஒப்பந்த சட்டமூலத்தை 329-299 என்ற வாக்குகள் அடிப்படையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதித்திருந்தனர். எனினும், 14 மேலதிக 14 வாக்குகளால் குறித்த சட்டமூலத்தை வேகமாக முன்னெடுப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .