2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் மோதல்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்சைக்குரிய நிலைமைகளில் பொலிவியாவின் ஜனாதிபதியாக இவா மொராலெஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது போலத் தோன்றுகின்ற நிலையில் பொலிவியாவில் மோதல்கள் வெடித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலானது இரண்டாவது சுற்றுக்குத் செல்லும் போலத் தோன்றிய நிலையில் வாக்குகள் எண்ணும் பணியானது நேற்று முன்தினம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குகள் எண்ணப்படுவதானது மீள ஆரம்பித்த நிலையில் முதலாவது சுற்றிலேயே வெல்வதற்கான வாக்குகளை ஜனாதிபதி இவா மொராலெஸ் கொண்டிருக்கின்றார்.

அந்தவகையில், தேர்தல் முடிவைத் தான் அங்கிகரிக்க மாட்டேன் என ஜனாதிபதி இவா மொராலெஸ்ஸின் பிரதான போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி கார்லோஸ் மெஸா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி சுக்ரே, தரிஜா பிராந்தியங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீ வைத்ததுடன், தலைநகர் லா பஸ்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் முரண்ட்பட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட முடிவுகளைக் காண்பிக்கும் இணையத்தளமானது 83.8 சதவீதத்தில் வாக்குகளை இற்றைப்படுத்துவதை நேற்று முன்தினம் நிறுத்தியிருந்தது. 45.3 சதவீதமான வாக்குகளுடன் ஜனாதிபதி இவா மொராலெஸ் முன்னிலை வகித்ததுடன், 38.2 சதவீதமான வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் கார்லோஸ் மெஸா இருந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இணையத்தளம் இற்றைப்படுத்தப்பட்டபோது ஜனாதிபதி இவா மொராலெஸ் 46.85 சதவீதமான வாக்குகளுடன் முன்னிலையில், கார்லோஸ் மெஸாவின் 36.74 சதவீதமான வாக்குகளுக்கு எதிராகப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இரண்டாமிடத்திலுள்ள கார்லோஸ் மெஸாவை விட 10 சதவீதம் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதால் இரண்டாவது சுற்றை ஜனாதிபதி இவா மொராலெஸ் தவிர்க்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X