2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

Editorial   / 2018 மே 22 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின், தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்'  செப்பு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்  இரண்டு பெண்கள் உட்பட 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று போராட்டம் 100ஆவது நாளை  நெருங்குவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த கடந்த 20ஆம் திகதி தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியாளர்  தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார், எனினும் 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இந்நிலையில், பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பர்ட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பதற்றம் அதிகரிக்கவே, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .