2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் காவலில் ஆசிரியர் இறந்ததையடுத்து காஷ்மிரில் மோதல்கள்

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பல பகுதிகளில், இந்திய பாதுகாப்புப் படைகளுடன் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மோதியுள்ளனர்.

பாதுகாப்பு விசாரணையொன்று தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட 29 வயதான இரசாயனவியல் ஆசிரியரான 29 வயதான றிஸ்வான் அசாட் பன்டிட், பொலிஸ் காவலில் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தமையைத் தொடர்ந்தே பாதுகாப்புப் படைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதியுள்ளனர்.

இந்நிலையில், றிஸ்வான் அசாட் பன்டிட்டின் இறப்பின் காரணம் தொடர்பான விசாரணை இடம்பெறுவதாக அறிக்கையொன்றில் நேற்று முன்தினம் பொலிஸார் தெரிவித்தபோதும் அவரது இறப்பை கொலை என அவரின் குடும்பம் கண்டித்துள்ளது.

அந்தவகையிலேயே, ஆர்ப்பாட்டமொன்றில் தெற்கு புல்வாமா மாவட்டத்தில் சனத்திரள் திரண்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகத்தை பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டதுடன், அப்பிராந்தியத்தில் இணைய சேவைகளை அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், றிஸ்வான் அசாட் பன்டிட்டை, அவந்திபுரா கிராமத்திலுள்ள அவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவித்த அவரின் சகோததரர் முபஷிர் அசாட், அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என அவர்கள் கூறியதாகவும், தனது சகோதரர் எதிலும் பங்கெடுத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில், கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மிரில் பதற்றம் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், றிஸ்வான் அசாட் பன்டிட் குறித்த தாக்குதல் தொடர்பாகவே கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்த தன்னை அடையாளங்காட்ட விரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர், எவ்வாறு வெடிபொருட்களைத் தயாரிப்பதென்று அவர் அறிந்திருந்தது தொடர்பாக தாங்கள் தகவல்களைக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X