2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போர் விமானத்திலிருந்து தாக்கக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரச் சோதனை

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகோய் ரக போர் விமானத்தில் இருந்து தாக்கும் வல்லமை படைத்தப் புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை, நேற்று (22) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

சுகோய்-30 ரக போர் விமானத்தில் இருந்து, இந்தப் புதிய ரக சூப்பர்ஸானிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில், இந்தச் சோதனை நடத்தப்பட்டது. 2.5 தொன் எடையுள்ள இந்த ஏவுகணை தான், இந்திய விமானப்படையில் அதிக எடை கொண்ட அதிபயங்கர ஏவுகணையாகத் திகழ்கிறது.

பிரம்மோஸ் வடிவமைப்புக்குழுவைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதில் மிஸ்ரா, தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி, மூத்த விமானப்படை அதிகாரிகள், டி.ஆர்.டிஓ. அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் இச்சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

“இந்தப் புதிய ரக ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம், இந்தியா உலகளவில் சாதனைப் படைத்துள்ளது. இதனால், சுமார் 300 கிலோமீற்றர் வரை எதிரி நாட்டைச் சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

“இந்தியப் போர் விமானத்தில் இருந்து இந்த நவீன ரக ஏவுகணை செலுத்தும் நிலையானது பாதுகாப்புத்துறையின் மிகச் சிறந்த மைல்கல்லாகும். எனவே இனிவரும் காலங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை ராணுவம், கப்பற்படை, விமானப்படை என மூன்று பிரிவுகளிலும் பயன்படுத்த இயலும். இது மகத்தான முன்னேற்றமாகும்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .