2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோசடிக்காக சீர்திருத்தல் மய்யத்தில் சூடான் முன்னாள் ஜனாதிபதி

Editorial   / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை மோசடியில் குற்றவாளியாக நேற்று  இனங்கண்டுள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவரை இரண்டாண்டுகளுக்கு சீர்திருத்தல் மய்யமொன்றுக்கு அனுப்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீருக்கு 75 வயதென்பதால், அதைக் கருத்திற் கொண்டே சிறைச்சாலையை விடுத்து அவர் சீர்திருத்த மய்யத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் 30 ஆண்டுகள் ஆட்சிக்கெதிரான மாதக்கணக்கான வீதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தால் அவர் பதவி அகற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்படும்போது கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், சூடானிய பவுண்ஸ்களையும் பறிமுதல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விதிமுறைக்கு மீறி வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் அதிகபட்ச 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூடானின் டாபர் பிராந்தியத்தில் நிகழந்த இனவழிப்பு, போர்க்குற்றச்சாட்டு, மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்காக 2009, 2010ஆம் ஆண்டுகளில் பிடிவிறாந்துகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .