2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மோதல்களையடுத்து இறந்த சாட் ஜனாதிபதி இட்றிஸ் டெபி

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாட்டின் வடக்கில், மாற்றம் மற்றும் இயைபுக்கான முனையுடனான (எஃப்.ஏ.சி.டி) கடந்த வாரயிறுதி மோதல்களையடுத்து, தனது காயங்களால் சாட் ஜனாதிபதி இட்றிஸ் டெபி இறந்ததாக, அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆறாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி டெபி வெல்லுவார் ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகள் எதிர்வுகூறப்பட்ட மறுநாளான நேற்று முன்தினமே குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கமும், பாராளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

பயிற்சி வழியாக இராணுவ அதிகாரியான 68 வயதான டெலி, 1990ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சியொன்றின் மூலம் பதவிக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி டெபியின் மகனும் நான்கு நட்சத்திர ஜெனரலான மஹ்மட் இட்றிஸ் எபி இட்னோ தலைமையிலான இராணுவச் சபையானது, அடுத்த 18 மாதங்களுக்கு ஆட்சி செய்யவுள்ளது.

எனினும், இடைக்காலப் பகுதி முடிந்ததும் சுதந்திரமான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தல்கள் இடம்பெறும் என அறிக்கையொன்றில் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நகர்வானது அரசியலமைப்புக்கு முரணானது எனவும், தேர்தல்களை ஒழுங்கமைப்பதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி இறந்தால், பாராளுமன்ற சபாநாயகரே பதவியேற்க வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X