2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனஃபோர்டுக்கு நீதிபதி எச்சரிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், பிரசாரக் குழுவின் முன்னாள் தலைவர் போல் மனஃபோர்டுக்கு, ஐக்கிய அமெரிக்க மத்திய நீதிமன்றத்தின் நீதிபதியொருவர், கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துகளை வழங்கினார் என்ற விடயம் தொடர்பாகவே, இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதா என்பது குறித்தும், அதன்போது ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை செய்துவரும் விசேட வழக்குத் தொடுநரான றொபேர்ட் மல்லர், தனது விசாரணைகளின் ஓர் அங்கமாக, போல் மனஃபோர்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இதனால் கைதுசெய்யப்பட்ட மனஃபோர்ட், கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

எனினும், வீட்டுக் காவலில் இருக்கும் போது, தனது பெயரைக் காப்பாற்றும் நோக்கில், தன்னை நியாயப்படுத்தி, உக்ரைன் நாட்டுப் பத்திரிகையொன்றில், வேறொருவரின் பெயரில் கட்டுரையொன்றை மனஃபோர்ட் எழுதினார் என, மல்லர் குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான நீதிமன்ற விசாரணை இடம்பெற்ற போது, நீதியான விசாரணைக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஊடகங்களுக்குக் கருத்துகளை வெளியிடுவதிலிருந்து விலகியிருக்குமாறு, மனஃபோர்டுக்கு, நீதிபதி அமி பேர்மான் ஜக்ஸன் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட நிபந்தனைகளில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கப்படக் கூடாது என்பது காணப்பட்ட நிலையில், மீண்டுமொரு முறை இவ்வாறு நடைபெற்றால், தனது உத்தரவை மீறினார் என்றே, மனஃபோர்டின் நடத்தை எடுத்துக் கொள்ளப்படும் என, நீதிபதி எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X