2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேலதிக பிறப்புக்களை ஊக்குவிக்க திட்டமிடும் சீனா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 23 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேலதிக பிறப்புக்களை ஊக்குவிக்கும் புதிய நடைமுறைகளை உள்ளடக்க சீனா திட்டமிட்டுள்ளதுடன், அதன் 2021ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான புதிய ஐந்தாண்டுத் திட்டத்தில் வேகமாக முதுமையடையும் சனத்தொகையையும் கணக்கெடுக்கவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

இணைகள் மேலும் பிள்ளைகளைப் பெறுவதை ஊக்குவிக்க பரந்த நிதி, கொள்கை ஆதரவை சீனா வழங்கும் என நிபுணர்கள் தெரிவிப்பதாக உத்தியோகபூர்வ சீனா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

பிறப்பு, பணியாட்தொகுதியின் தரம், சனத்தொகையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மேலும் கவர்ச்சிகரமான சனத்தொகை கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என சீன சனத்தொகைச் சங்கத்தின் உப தலைவர் யுவான் ஸின் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையொன்றுக்குரிய ஒரு குழந்தை கொள்கையை 1978ஆம் ஆண்டில், வறுமையை ஒழிப்பதற்காக, வேகமான சனத்தொகை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க எனக் கூறி குறிப்பாக நாட்டுப் புறங்களில் சீனா அறிமுகப்பட்டுத்தியிருந்தது.

எவ்வாறெனினும், கட்டுப்பாடுகளைத் தளர்த்த 2016ஆம் ஆண்டு சீனா தீர்மானித்ததுடன், ஜோடிகள் இரண்டாவது குழந்தையொன்றைக் கொண்டிருக்க அதிகரித்து வரும் முதியோர், குறைவடையும் ஊழியப் படையால் அனுமதித்திருந்தது.

கடந்தாண்டு முடிவில் 60அல்லது அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது 254 மில்லியனாக, அந்நாட்டின் சனத்தொகையில் 18.1 சதவீதமாக கடந்தாண்டு முடிவில் காணப்பட்டிருந்தது. குறித்த எண்ணிக்கையானது 2025ஆம் ஆண்டில் 300 மில்லியனாகவும், 2035ஆம் ஆண்டில் 400 மில்லியனாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 2050ஆம் ஆண்டில் ஊழியப்படையானது 200 மில்லியனால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X