2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மல்லரின் முதல் இலக்கு ட்ரம்ப் ஜூனியர்?

Editorial   / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லர், தனது விசாரணைகளின் ஓர் அங்கமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் குறித்த விசாரணையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஐ.அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள செய்தியின்படி, அப்போதைய வேட்பாளரான ஹிலாரி கிளின்டனுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை வைத்திருப்பதாக, ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், அவரைச் சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்புக் குறித்த சர்ச்சை எழுந்த போது, பிள்ளைகளைத் தத்தெடுப்பது தொடர்பாகவே அவரைச் சந்தித்ததாக, ட்ரம்ப் ஜூனியர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடியான கருத்து உள்ளடக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, இந்தச் சந்திப்புத் தொடர்பான சர்ச்சைகளுக்கான அந்தப் பதில் எவ்வாறு வெளியிடப்பட்டது, அதில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பாக, வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம், மல்லரின் குழு விசாரணை செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிலும், ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணியாகப் பணியாற்றிய றொபேர்ட் பி. ட்ரௌட், இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் முரண்பட்டுக் கொண்டே, தனது பதவியிலிருந்து விலகினார் என்றும் தெரிவிக்கப்படும் நிலையில், அவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .