2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாலைதீவுகளில் அவசரகால நிலைமை 30 நாட்களுக்கு நீடிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலைமையை, மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கிகாரம் வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனவும் அரசமைப்பு நெருக்கடி காணப்படுகிறது எனவும் தெரிவித்து, ஜனாதிபதி அப்துல்லா யமீனால், இந்த நீட்டிப்புக் கோரப்பட்டிருந்தது.

மாலைதீவுகளின் இந்த நிலைமை தொடர்பாகத் தமது கவனத்தை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அவசரகால நிலைமை நீக்கப்பட வேண்டுமெனவும், வழக்கமான நிலைமையைக் கொண்டுவர வேண்டுமெனவும் கோருகின்றன.

சுற்றலாத்துறையைப் பிரதானமாகக் கொண்ட மாலைதீவுகளில், அவசரகால நிலைமை காரணமாக, ஹொட்டல்களின் முன்பதிவுகள், தினமும் இரத்துச் செய்யப்பட்டு வருகின்றன என, ஹொட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவசரகால நிலைமை என்பது, “மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொருந்தும். சட்டத்தை மதிக்கும் வதிவிடதாரிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது பொருந்தாது” என, ஜனாதிபதி யமீனின் அலுவலகம் தெரிவிக்கிறது.

எது எவ்வாறாக இருந்தாலும், அவசரகால நிலைமை நீட்டிக்கப்பட்டமை, அந்நாட்டில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் உட்பட அரசியல் கைதிகள் 9 பேரை விடுவிக்க வேண்டும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் சட்டவிரோதமானது என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில், அவசரகால நிலைமையை, ஜனாதிபதி யமீன் பிரகடனப்படத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .