2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மியான்மாரின் பேரழிவு, சமூக வெறுப்பை ஊக்குவித்ததன் விளைவு’

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் நிலவும் நெருக்கடியும், அதன் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படும் சம்பவங்களும், வெறுப்பதற்குச் சமூகமொன்று தூண்டப்பட்டதுவும், மனித உரிமைகள் தொடர்பில் உலகளாவிய தலைமைத்துவம் ஒன்று இல்லாமையுமே காரணம் என, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

உலகின் 159 நாடுகள் தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையை, மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

இதில் அக்குழு, “வெறுப்புக் காணப்படும் கருத்துகளை வெளியிடும் தலைவர்கள்”, சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டை, வழக்கமான ஒன்றாக மாற்றுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

மியான்மாரிலிருந்து ஈராக், தென்சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளில், மனிதத்துக்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள மன்னிப்புச் சபை, அவற்றுக்கெதிரான எதிர்வினையை ஆற்றுவதில், சர்வதேச சமூகம் தோல்வியடைந்துள்ளது என்றும் தெரிவித்தது.

ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளின் தலைவர்கள், சிவில் உரிமைகளுக்காகச் செயற்படுவதை விடுத்து, பல மில்லியன்கணக்கானோரின் உரிமைகளை மறுக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியது.

குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மனித உரிமைகள் தொடர்பில் பிற்போக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் எனத் தெரிவித்த அக்குழு, முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஐ.அமெரிக்காவுக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை, “வெளிப்படையான வெறுப்பு” என வர்ணித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .