2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மியான்மார் யங்கூனில் இராணுவச் சட்டம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரின் வர்த்தகத் தலைநகரான யங்கூனிலுள்ள ஹலைங்தயா, சில மாவட்டக்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹலையங்தயாவில், சீன தொழிற்சாலைகள் மீதான தீத் தாக்குதல்களையடுத்து, குறைந்தது 34 ஆர்ப்பாட்டக்காரர்களை, பாதுகாப்புப் படைகள் கொன்றதாக மியான்மார் நெள ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏனைய இடங்களில் 16 பேர் கொல்லப்பட்டதாக அரசியல் கைதிகளுக்கான மனித உரிமைகள் உதவிச் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இதுவரையில் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 138ஆக உயர்ந்துள்ளது.

நான்கு ஆடைத் தொழிற்சாலைகளையும், உரத் தொழிற்சாலையொன்று தீ வைக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுத்ததாக, இராணுவத்தால் நடத்தப்படும் மியாவட்டே தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மொபைல் தரவானது மியான்மார் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .