2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீண்டுமொரு முறை ஐ. அமெரிக்க அரசாங்க முடக்கம்?

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இன்னொரு முடக்கத்தைத் தடுப்பதற்காக ஜனநாயக, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகையில், குடியேற்ற தடுப்புக் கொள்கை தொடர்பாக முரண்பட்ட நிலையில் எல்லை பாதுகாப்புக்கு நிதியளிப்பது தொடர்பான பேச்சுகள் முறிவடைந்துள்ளதாக குடியரசுக் கட்சியின் செனட்டரான றிச்சர்ட் ஷெல்பி தெரிவித்துள்ளார்.

பேச்சுக்கள் தற்போது முறிவடைந்துள்ளதாக “பொக்ஸ் நியூஸ் சண்டே” எனும் நிகழ்ச்சிக்குத் தெரிவித்துள்ள றிச்சர்ட் ஷெல்பி, ஐக்கிய அமெரிக்காவுக்குள் சட்டரீதியற்ற முறையில் நுழைபவர்களுக்கான தடுப்பு வசதிகளிலுள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தொடர்பான ஜனநாயகக் கட்சியினரின் விருப்பமே பேச்சுக்களில் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இணக்கமொன்றை அடைவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு காங்கிரஸ் பேரம்பேசல் குழுவொன்று, எல்லைப் பாதுகாப்புக்கு நிதியளிப்பதற்கான பிரச்சியனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை வாரயிறுதியிலும் தொடர்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உதவியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கருத்துத் தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜோன் டெஸ்டர், இணக்கமொன்று அடையப்படும் என தான் நம்பிக்கையாக இருப்பதாகக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இன்று இணக்கமொன்றை அடைவதற்கான வாய்ப்புகள் 50:50 என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக றிச்சர்ட் ஷெல்பி தெரிவித்துள்ளார். அந்தவகையில், மேலதிக பேச்சுவார்த்தைகள் எதுவும் திட்டமிட்டிருக்கப்பட்டிருக்கவில்லை என தன்னை அடையாளங் காட்ட விரும்பாத தகவல் மூலமின்றால் கூறப்பட்டிருந்தது.

இணக்கமொன்றுக்கு இன்று வந்து, ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான நேரத்தை வழங்கி, அதில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்ப்பிகையுடன் இருக்கின்றனர். உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் ஏனைய மத்திய முகவரகங்களுக்கான நிதியளிப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிக்கோவுடனான எல்லையுடனான சுவருக்காகத் தான் வலியுறுத்திய 5.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெறாமலே, ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் 35 நாள் பகுதியளவிலான அரசாங்க முடக்கத்தை கடந்த மாதம் 25ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வர இணங்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X