2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் கடந்த 10 நாள்களில் பெய்த மழை காரணமாக, பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 10 நாள்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்தமையால், இதனால் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில் பெரியதும் சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரத்து 239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 59 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மழை நின்றதால், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள், வீடுகளுக்கு திரும்பி சேதடைந்த வீடுகளைச் சரி செய்தனர். மாநிலம் முழுவதும் 11,159 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மலப்புரம் வயநாடு பகுதிகளில், வெள்ளம் பாதித்த பகுதிகளை, கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் பார்வையிட்டார்.

இதனிடையே கேரளாவின்- மலப்புரம் கோழிகோடு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாள்களுக்கு, அதிதீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், அலபுழா, இடுக்கி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .