2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி விடுதலையாவார்?

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் லூலா த சில்வா, விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் அவர் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லூலா, பல்வேறு முறுகல்களுக்குப் பின்னர், அண்மையில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவர்களின் முதலாவது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவுடன், அவர்கள் சிறையிலடைக்கப்பட வேண்டும் என, 2016ஆம் ஆண்டு, பிரேஸில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக் காரணமாகவே, லூலா த சில்வா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அத்தீர்ப்பை மாற்றுவதற்கே, தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

பிரேஸில் உச்சநீதிமன்றமே, இது தொடர்பான முடிவை எடுக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், உச்சநீதிமன்றத்திலுள்ள பல நீதியரசர்கள், இத்தீர்ப்பை மாற்றுவதற்கான தமது ஆதரவை, பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே, இவ்வாரத்துக்குள்ளேயே இது தொடர்பான முடிவெடுக்கப்படும் எனவும் அத்தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டால், லூலா போன்றோர், மேன்முறையீடுகளை மேற்கொள்ளும் காலத்தில், சிறைக்குச் செல்ல வேண்டிய தேவையேற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்காத பட்சத்தில், இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படும் எனவும் கருதப்படுகிறது.

ஆனால், இவ்வாறான தீர்ப்பு மாற்றப்பட்டால், பிரேஸிலின் ஊழலுக்கெதிரான செயற்பாட்டில், பாரியளவிலான பின்னடைவு ஏற்படுமென, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X