2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான‘1எம்டிபி’ ஊழல் வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன்  210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து இன்று ( 28) தீர்ப்பளிக்கப்பட்டது.   

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது ‘1எம்டிபி’ ஊழல் தொடர்பில் தொடுக்கப்பட்ட 5 வழக்குகளின், முதல் வழக்கில் அவர் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள், மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால், இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிப்பதால் அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நஜிப் குறிப்பிட்டிருந்தார். தாம் குற்றமற்றவர் என்று குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் நேற்று பேசிய நஜிப், “நான் 42 மில்லியன் ரிங்கட் வேண்டும் என்று கேட்கவில்லை. அது எனக்குத் தரப்படவும் இல்லை. இதற்கான ஆதாரமும் இல்லை,” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .