2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்னாள் பிரதமர் நஜீப் மீது பணச்சலவைக் குற்றச்சாட்டு

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீது, பணச்சலவைக் குற்றச்சாட்டு, இன்று (08) தாக்கல் செய்யப்பட்டது. பல பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியியல் மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பாகவே, இப்புதிய குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோலா லம்பூரில் உள்ள நீதிமன்றமொன்றில் நேற்று ஆஜர்செய்யப்பட் நஜீப் மீது, 10.3 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களைப் பணச்சலவை செய்தார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டதோடு, அது தொடர்பான 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க அவர் மறுத்தார்.

அவர் மீதான இந்த 3 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படுமாயின், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 15 ஆண்டுகள் வரை, அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

கடந்த மாதம் நஜீப் கைதுசெய்யப்பட்ட போது, அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதற்கட்டக் குற்றச்சாட்டுகளை விட, இவை வேறானவையாகும். தனது பதவியைப் பயன்படுத்திப் பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதே, அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டாகும். அக்குற்றச்சாட்டுக்காக அவர், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனயை எதிர்கொள்கிறார்.

மலேஷிய அபிவிருத்தி நிதியத்திலிருந்து பல பில்லியன் கணக்கிலான ஐ.அமெரிக்க டொலர்கள் களவாடப்பட்டன என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், மஹதீர் மொஹமட் தலைமையிலான அந்நாட்டின் புதிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில், நஜீப் ரஸாக் தோல்வியடைவதற்கு, இக்குற்றச்சாட்டுகளே காரணமாக அமைந்தன.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நஜீப்புக்கு இன்று பிணை வழங்கப்பட்டாலும், அடுத்துவரும் சில வாரங்கள், அவருக்குக் கடினமான காலங்களாகவே அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .