2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூளைக் காய்ச்சலால் இழப்புகள்: விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலின் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 130ஐ எட்டியுள்ள நிலையில், இது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு, உச்ச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு மீதான விசாரணை, இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதை விசாரணை செய்த நீதியரசர், மூளைக் காய்ச்சல் நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் இன்னும் ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் காரணமாக 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .