2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’மெத்தெம்பதமீன் ஆய்வுகூட ஐ. அமெரிக்க தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபானின் போதைப்பொருள் ஆய்வுகூடங்கள் எனக் கூறப்படுபவை மீதான ஐக்கிய அமெரிக்க வான் தாக்குதல்களில், சிறுவர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாண்டு மே மாதம் இடம்பெற்ற குறித்த தாக்குதல்களில் மேலும் 30 இறப்புகள் ஏற்பட்டதாக நம்பிக்கைகுரிய தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.

இந்நிலையில், தலிபானுக்கு நிதியளிக்க உதவும் தலிபான்களால் நடாத்தப்படும் மெத்தெம்பதமீன் ஆய்வுகூடங்களையே தாம் இலக்கு வைத்ததாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்திருந்தது.

எனினும், போதைமருந்து ஆய்வுகூடங்களும், அதனுடன் இணைந்த பணியாளர்களாலும் சட்டரீதியாக இலக்குகளாகக் குறிப்பிட முடியாது என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.

ஃபராஹ் மாகாணத்திலும், அயல் நிம்ரோஸ் மாகாணத்தில் இவ்வாண்டு மே மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற குறித்த தாக்குதல்களில் போதைமருந்து தயாரிப்பு நிலையங்கள் எனக் கூறப்பட்ட 60க்கும் மேலான நிலைகளை ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கியிருந்தன.

இந்நிலையிலேயே, தாக்குதல்கள் இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவொன்று அங்கிருப்பவர்களுடன் நேர்காணல்களை நடாத்தி 14 சிறுவர்கள் உள்ளடங்கலாக 39 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 30 பே இறந்ததாகவும் முடிவுக்கு வந்துள்ளது.

இதுதவிர, ஐக்கிய நாடுகளின் அறிக்கைப்படி குறித்த நிலையங்கள் நேரடியாக தலிபான்களால் நடாத்தப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X