2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மே தினத்தில் வன்முறைகள்

Editorial   / 2018 மே 02 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தொழிலாளர் தினம், மே 1ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அத்தினத்தை நினைவுபடுத்திய பேரணிகளும் போராட்டங்களும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றன. ஆனால், அவ்வாறான சில பேரணிகள், இறுதியில் வன்முறைகளாக மாறியிருந்தன.

பரிஸ்

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அரசதுறைச் சீர்திருத்தத்துக்கு எதிரான பேரணி இடம்பெற்றது. ஆனால் அப்பேரணி, இறுதியில் கலவரமாக மாறியிருந்தது.

பேரணியில் ஈடுபட்டிருந்த சிலர், மக்டொனால்ட்ஸ் உணவகமொன்றையும், கார் விற்பனை நிலையமொன்றையும் தீவைத்துக் கொளுத்தினர்.

கறுப்பு மேலாடையும் முகமூடியும் அணிந்திருந்த சுமார் 1,200 பேர், “கிளர்ந்தெழு பரிஸ்”, “அனைவரும் பொலிஸை வெறுக்கின்றனர்” போன்ற சுலோகங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்ததோடு, அதைச் செவிமடுக்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர். அத்தோடு, சுமார் 300 பேரையும் கைதுசெய்தனர்.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் உருவப் பொம்மையை, அந்நாட்டின் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். மே தின ஊர்வலத்தின் போது, ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

குறுகிய கால பணி ஒப்பந்த நடைமுறையை இல்லாது செய்வதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் எனத் தெரிவித்து, அவர்களின் கோபம் காணப்பட்டது.

பேரணிகளில், 5,500 பேர் கலந்துகொண்டனர் எனத் தெரிவித்த பொலிஸார், பெரும்பாலும் அவர்கள் அமைதியாகச் செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டனர்.

துருக்கி

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில், முக்கியமான பாதுகாப்பு இடங்கள் மூடப்பட்டிருந்தன. சர்வதேச தொழிலாளர் தினத்தன்று, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவது வழக்கம் என்பதாலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய தஸ்கிம் சதுக்கத்தில், பொலிஸாரின் தடையை மீற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இஸ்தான்புல்லில், 84 பேர் கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலம்பியா

கொலம்பியாவின் மெடெலின் பகுதியில், மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் மீது, கற்களை வீசி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X