2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேற்கு லிபியாவிலிருந்து வெளியேறிய ரஷ்யப் போராளிகள்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியத் தலைநகர் திரிபோலியின் முன்னரங்குகளிலிருந்து பின்வாங்கியமையத் தொடர்ந்து, திரிபோலிக்குத் தெற்காகவுள்ள பனி வாலிட் நகரத்திலிருந்து லிபியாவிலுள்ள ரஷ்யப் போராளிகள், அவர்களது நட்புறவுப் படைகளால் வெளியேற்றப்பட்டதாக அந்நகரத்தின் மேயர் சலீம் அலைவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய ரஷ்யர்களின் கூறப்படுகின்ற வெளியேற்றமானது கிழக்குத் தளபதியான காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய இராணுவத்துக்கும், அதன் வெளிநாட்டு நட்புறவுகளுக்கும் இன்னொரு அடியாக நோக்கப்படுகிறது.

லிபிய தேசிய இராணுவத்துடன் இணைந்த ரஷ்யப் போராளிகள், அவர்களது கனரக உபரணங்களுடன் திரிபோலியிலிருந்து திரிபோலியிலிருந்து தென்கிழக்காக 150 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பனி வாலிட் விமானநிலையத்துக்குச் சென்றதாக சலீம் அலைவன் கூறியுள்ளார்.

மேற்கு லிபியாவிலிருந்து லிபிய தேசிய இராணுவத்தின் பலம்வாய்ந்த மத்திய மாவட்டமான ஜுஃப்ராவுக்கு ரஷ்யர்கள் பறந்து சென்றதாக சலீம் அலைவன் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .